Welcome...

Welcome....

நீ உடனிருந்தால்....


விதிவிலக்கான வாழ்க்கை
வரைமுறையோடு..
தேவர்களை தேடுகிறேன்
ஆசிர்வாதத்தோடு வாழ

வழிமறிக்கிறது விதி
என்னும் முட்டாளின் முகவரி
எத்தனை தொலைப்பேன்
ஏற்பில்லா இப்பிறவிக்கென

அப்பழுக்கில்லாத ஆசைகள்
என் விலாசம் தேடி
அன்றாடம் கதவை தட்ட
எதற்கும் திறக்கவில்லை என் வாசல்

கல்வி வேண்டி காத தூரம்
காதல் வேண்டி தொலை தூரம்
வேண்டாமாலே பிறந்தபிள்ளைகளை
வழி நடத்த மீத தூரம்

இதோ இன்னும் கடந்து கொண்டிருக்கிறேன்
வழி மறிக்கும் மற்ற தொடர் கனவுகளை கடந்து
இடைவிடா தூரம் விடாமுடியா ஆசைகள்

எல்லாம் கடப்பேன்
அவன் ஒருவன் உடனிருந்தால்.....